இப்பாடப்
பகுதி, தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான கு.அழகிரிசாமியை
அறிமுகம் செய்து, அவர் எழுதிய சிறுகதைகளின் வழியாக அவரது
சமுதாயப் பார்வை, பாத்திரப் படைப்பு, நடைத் திறன், படைப்பாக்க
உத்திகள் என்பனவற்றை வெளிப்படுத்துகின்றது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இப்பாடத்தை நீங்கள் கற்பதனால் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும்
பெறலாம்.
தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளுள்
ஒருவரான கு. அழகிரிசாமியைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள இயலும்.
கு.அழகிரிசாமியின்
சிறுகதைகளின் கதைப் போக்குகளை
முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
கரிசல் மக்களின் முப்பது
ஆண்டுக் கால வாழ்வியலை
விளங்கிக் கொள்ளலாம்.
கு. அழகிரிசாமியின்
பன்னோக்குப் பரிமாணங்களை அறிந்து
கொள்ள இயலும்.
கு.அழகிரிசாமியின்
படைப்பாக்கத் திறனை விளங்கிக்
கொள்ள முடியும்.