5.3 விந்தனின் சமுதாயப் பார்வை விந்தன், “போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் ‘ரஸாயன’ங்களை, சமுதாயத்தின் புற்று நோய்களுக்கு ‘மின்சாரச் சிகிச்சை’யளிக்கும் புத்தம் புது முறைகளை, குரூர வசீகரங்களைத்” (விந்தன் கதைகள், முன்னுரை) தம் கதைகளில் படம்பிடித்துக் காட்டியுள்ளார். பெண்கள் அடிமையாக வாழும் வாழ்க்கை விந்தனுக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே அவ்வாழ்க்கை மாற வேண்டுமென்று தம் கதைகளில் குரல் கொடுத்துள்ளார். காதல் என்பது விந்தன் கதைகளில் பேசப்பட்டாலும், அதில் அவருக்கு உடன்பாடில்லை. காதல் என்பது இலக்கியங்களுக்கானது, நடைமுறை வாழ்க்கையில் அது சாத்தியப்படாது என்ற கருத்துடையவர் விந்தன். வீட்டு வேலை பார்த்து, வாழ்வை நடத்தும் செல்லம் நாளெல்லாம் வேலை செய்துவிட்டு, மாதத்திற்கு 5 ரூபாய் சம்பளமாகப் பெறுகிறாள். “வேலைக்கு மாதம் பிறந்தால் சுளைசுளையாக ஐந்து ரூபாய் சம்பளம். அத்துடன் மத்தியான வேளையில் ஏதாவது சாதம், குழம்பு மீதமானால், அவை பிச்சைக்காரனுக்கு அல்ல; அவளுக்குத்தான்! மத்தியானம் மட்டுமா இந்தச் சலுகை? இரவில் ஏதாவது கறிவகைகள் மிஞ்சி மறுநாள் காலை அவை கெட்டுப் போனால் செல்லத்துக்கு அடித்தது யோகம்! அந்தக் கறிவகைகள் அத்தனையும் குப்பைத் தொட்டிக்கா என்கிறீர்கள்? இல்லை, இல்லை. செல்லத்தின் வயிற்றுக்குத்தான்” என்ற அடிகளின் மூலம் செல்லத்தின் வயிறு நிரம்பும் வகை என்ன என்பதைக் காட்டுகிறார். இப்படிக் குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டிய உணவைச் சாப்பிட்டு வாழும் ஏழ்மை வாழ்வு செல்லத்துக்கு என்றால், வேலை வெட்டி இல்லாத அவள் கணவன் சின்னப்பன் அவள் சாப்பாட்டில் பங்குக்கு வரும் அவலம் வேறு. செல்லமும் சின்னப்பனும் கிடைக்கும் உணவை உண்டு ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, “அதன் பயனாக அவளுடைய உயிர் மட்டும் அல்ல; அவனுடைய உயிரும் உடம்பில் ஊசலாடிக் கொண்டிருந்தது. இருவரும் உயிருள்ள பிணங்களைப் போல ஊரில் நடமாடிக் கொண்டிருந்தனர்” என்ற அடிகளின் மூலம் காட்டுகிறார். எச்சில் இலைக்கு நாயோடு போட்டி போடும் மனிதனை ஒரே உரிமை என்ற கதையில், விந்தன் படைத்துக் காட்டுகிறார். “என் கையிலிருந்த இலையைக் கண்டதும் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு ஜீவன்கள் என்னை நோக்கி ஓட்டமாய் ஓடி வந்தன. அவற்றில் ஒன்று நாய்; இன்னொன்று பெயருக்கு ‘மனித’னாகப் பிறந்திருந்த சோலையப்பன். சாமி, சாமி! அந்த இலையை இப்படிக் கொடுங்க, சாமி! கீழே போட்டுடாதீங்க, சாமி! என்று கெஞ்சினான் அவன். அவனுக்குப் பக்கத்திலே நாய் வாயைப் பிளந்து கொண்டு நாக்கை நீட்டிக் கொண்டு, வாலை ஆட்டிக் கொண்டு, என்னை நன்றியுடன் பார்த்து நின்றது. அந்த நாயைப் போலவே அவனும் என்னை நன்றியுடன் பார்த்தான்; வாயைத் திறந்தான்; நாக்கை நீட்டினான்; ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் ; நாய் வாலை ஆட்டிற்று; அவன் ஆட்டவில்லை!” என்று நாயினும் கேவலமாய் மனிதனைச் சீர்குலைக்கும் வறுமையின் கொடுமையைத் தம் கதையில் விந்தன் படைத்துக் காட்டுகிறார். மேலும், எத்தனை பேரோ என்ற மற்றொரு கதையில், “நாய்க்கு என்ன தெரியும்? எஜமானனைக் கண்டால் வாலை ஆட்டவும், அன்னியரைக் கண்டால் குரைக்கவும் தெரியும். எஜமான் காரில் ஏறும் போதும் இறங்கும் போதும் கதவைத் திறந்துவிட அதற்குத் தெரியுமா? ‘ஹாரன்’ சத்தத்தைக் கேட்டதும் அலறி அடித்துக் கொண்டு வந்து, பங்களாவின் கேட்டைத் திறந்து விட அதற்குத் தெரியுமா? ‘ஏய்!’ என்று கூப்பிட்ட மாத்திரத்தில் ஓடோடியும் வந்து, ‘ஏன் சாமி !’ என்று மரியாதை செலுத்த அதற்குத் தெரியுமா? இன்னும் ‘இரவில் தூங்கினாயோ, உன்னை வேலையிலிருந்து நீக்கி விடுவேன்’ என்றும், ‘நின்ற இடத்திலேயே, நிற்காமல் போனாயோ விரட்டி விடுவேன்’ என்றும் நாயைப் பயமுறுத்த முடியுமா? இப்படிப் பல சௌகரியங்களையும் உத்தேசித்துத்தான் அவர் பெரியசாமியையும் சின்னசாமியையும் தமது பங்களாவைக் காவல் காக்க வைத்துக் கொண்டார்” என்று விந்தன் படைத்துக் காட்டும் - நாயோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தகுந்த நிலையில் வாழும் - ஏழை எளியோரைக் காணும்போது கல்நெஞ்சக்காரருக்கும் கண்ணீர் வந்துவிடும். அவர் எழுத்துகளைப் படிக்கும்போது, பணக்கார வர்க்கத்தின் மீது கோபமும் ஆத்திரமும் வாசகர்களுக்குத் தோன்றியே தீரும். விந்தன், ஏனைய சக எழுத்தாளர்களைப் போலக் காதலைத் தம் கதைப்பொருளாக்கிக் கொண்டுள்ளார். ஆனால், அவர் காதலைப் பார்க்கும் பார்வையில் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார். அவருடைய, பரிசு பெற்ற முல்லைக் கொடியாள் என்ற கதை ஒரு காதல் கதையே. தன் தங்கையின் கிராமத்துக்குக் கோடை விடுறைக்கு வரும் கதைநாயகன், எதிர்வீட்டில் முல்லைப்பூப் பறித்துக் கொண்டிருக்கும் பெண்ணிடம் மனத்தைப் பறிகொடுக்கிறான். அடுத்த விடுமுறைக்கு வரும்போது, அவளோடு பேசவும் பழகவும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவன் தங்கை, வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே சென்று விட்டதால், எதிர்த்த வீட்டு முல்லைக் கொடியாள் அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு தந்து தங்க வைக்கிறாள். தன் மீது காதல் கொண்டுள்ளதால்தான் இவ்வாறு தன்னை உபசரிக்கிறாள் என்று நினைத்துக் கொள்கிறான். அவன் மூன்றாம் முறை அவளைச் சந்திக்க நேர்ந்த போது, அவள் தன் கல்யாணச் செய்தியைக் கூறுகிறாள். “அப்படியானால் நீ... நீ... காதலிக்கவில்லையா?” என்று அவன் கேட்க அவள், “ஊஹூம்; எங்க ஊரிலே அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்” என்று சொல்லி வெட்கத்தால் தலைகுனிகிறாள். “பட்டணத்துப் பயல்களைப் பற்றியும் கொஞ்சங்கூடத் தெரியாத அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்?” என்று கூறி அவன் ஊருக்குத் திரும்பிச் செல்வதாகக் கதை முடிகிறது. இக்கதையின் மூலம் காதல் என்பதெல்லாம் நாமே கற்பனையால் வளர்த்துக் கொள்வதுதான். அப்படி நினைத்துக் கொண்டு அதற்காக நேரத்தைச் செலவழிப்பதும் உருகுவதும் அர்த்தமற்றது என்று உணர்த்துகிறார், விந்தன். வாழ வழியில்லை என்ற கதையில் இருவர் காதலிக்கின்றனர். அவர்கள் காதலுக்கிடையில் சாதி குறுக்கிடுகிறது. அக்காதலர்கள்,
என்றும், இன்னொரு சமயம்,
என்றும் நினைக்கின்றனர். காதலர்கள் இருவரும் தனியே சந்தித்துப் பேசக் கூட முடியாத நிலையில், அவன் அவளுக்கு “நாம் வாழ வழியில்லை” என்று கடிதம் எழுதுகிறான். அவள் அதற்குப் பதிலாக,
என்று எழுதுகிறாள். முடிவில் அவன்,
என்று நினைப்பதுடன் கதை முடிகிறது. இக்கதையிலும் காதலை வெறும் மனப்பிரமையாகவே காட்டியுள்ளார். அவள்
என்னவானாள்? என்ற கதையில், “காதல் என்பது பெண்களைப்
பலசாலிகளாக்கி
விடுகிறது. ஆண்களைப் பலவீனர்களாக்கி
விடுகிறது” என்ற கருத்தை எடுத்துரைத்துள்ளார் விந்தன். ஆண்கள் இதை அறிந்தும்
தங்களைக் காதலில் ஈடுபடுத்திக் கொண்டு பலவீனமாகிப் பாழ்படுகிறார்கள் என்றுரைக்கும்
அவர், இந்த இலக்கியவாதிகள்,
என்று சுட்டுகிறார். இக்கதையில் காதலித்த பெண் தன் காதலனை விட்டுவிட்டு வேறொருவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். அதைக் கண்ட காதலன் அவள் தன்னைப் பொறுத்த வரை செத்து விட்டதாக நினைக்கிறான். பின்பு அவள் சாகவில்லை, தான் செத்துவிட்டதாக நினைக்கிறான். அதன் பின்பு தானும் சாகவில்லை, தங்களுக்கிடையேயுள்ள காதல் தான் செத்துவிட்டது என்று புரிந்து கொள்கிறான். கவிதையிலே, காவியத்திலே, கதையிலே அதற்குச் சாவே இல்லை. ஆனால் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் உள்ளது போல அதற்கும் உண்டு என்று புரிந்து கொள்கிறான். காவியக் காதல்தான் வாழும் ; உண்மை வாழ்க்கையில் ‘காதல் வெறும் பிதற்றலே’ என்று காட்டுகிறார் விந்தன். விந்தன், தம் கதைகளில் பெண்ணடிமைத்தனத்தைப் பரவலாகக் காட்டியுள்ளார். குடும்பம் என்ற கூட்டுக்குள் பெண்கள் சிறைப்பட்டுப் போகின்றனர் என்று கூறும் அவர் தம் கதைகளில் அக்கருத்தைக் காட்சியாக அமைத்துள்ளார். மாட்டுத் தொழுவம் என்ற கதையில், பெண்ணும் மாடும் ஒன்று என்பதனை மிக யதார்த்தமாகக் கதைப்படுத்தியுள்ளார். தாய் வீட்டில் ஆடிப் பாடி விளையாடுகின்ற பெண், திருமணச் சந்தையில் விலைபேசி விற்கப்படுகிறாள். “எத்தனையோ நாட்கள் என்னை யாரும் பார்க்க முடியாத இருட்டறையில் இருந்த பிறகு, கடைசியில் ஒரு நாள் ‘அவர்’ வந்தார். அவருடன் சில ‘தரகர்களும்’ வந்திருந்தனர். ‘தரகர்கள்’ என்றால் இங்கே நிஜத் தரகர்கள் என்று அர்த்தமில்லை. எல்லாம் அவருடைய உற்றார், உறவினர்தான். ஏதாவது ஆடு மாடு வாங்கும் போது பேரம் நடக்கும் பாருங்கள், அதே மாதிரிதான் ஏறக்குறைய என்னுடைய கல்யாணப் பேச்சும் நடந்தது. பேரமெல்லாம் ஒருவாறு பேசி முடித்தார்கள். ஒரு நாளையும் குறிப்பிட்டு வைத்தார்கள். அன்று இரு வீட்டாருமாகச் சேர்ந்து ஊரார், உறவினரைக் கூட்டினார்கள். நான் கழுத்தைக் குனிந்து கொடுத்தேன், அவர் தாலியைக் கட்டிவைத்தார். அவ்வளவுதான், அன்றைய தினத்திலிருந்து நான் அவருடைய ஏகபோக உரிமைப்பொருளாக ஆகிவிட்டேன்.” இப்படி அப்பெண், தான் விலைபேசி விற்கப்பட்டதாக வருந்துகிறாள். ‘கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருஷன்’ என்று வாழக் கட்டாயப் படுத்தப்படும் அவள், காலை 2 மணி தொடங்கி வீட்டு வேலைகளில் மூழ்குகிறாள். புகுந்த வீட்டாரின் அன்பின்மையும் கணவனின் அதிகாரமும் அவள் மனத்தை நோகடிக்கின்றன. ‘பேய்க்கு இடம் கொடுத்தாலும் கொடுக்கலாம்; பெண்ணுக்கு இடம் கொடுக்கக் கூடாது!’ என்று அவளைப் புகுந்த வீட்டார் அடக்கி ஆள்கின்றனர். கருத்தரிக்கும் அவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்புகின்றனர். ஆனால் அது கருணையினால் அல்ல என்பதைப் புரிந்து கொள்கிறாள். “ஆச்சு, மாடும் இப்பொழுது சினையாய்த்தான் இருக்கிறது; நாளைக்கு அதைக் கிராமத்துக்கு ஓட்டி வைக்கப் போகிறார்கள். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வரும். வந்தால் மீண்டும் பாலைக் கறந்து குடிப்பார்கள். வராமல் செத்தொழிந்தால் வேறுமாடு வாங்கிக் கொள்வார்கள்.” “இதோ, அப்பாவுக்குக் கடிதம் எழுதி அவரும் என்னை அழைத்துக் கொண்டு போக வந்து விட்டார். நானும் நாளைக்குப் போகிறேன். பெற்றுப் பிழைத்தால் திரும்பி வருவேன். பழையபடி வீட்டுக் காரியங்களையும் கவனித்துக் கொள்வேன். அவரும் கவனித்துக் கொள்ள வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்வார். வராமல் செத்தொழிந்தால் என்ன பிரமாதம்? அவர் வேறு கல்யாணம் செய்து கொண்டு விடுவார். அவ்வளவுதான். இப்பொழுது நீங்களே சொல்லுங்கள் நான் வாழ்வது, மனிதத் தொழுவமா? இல்லை மாட்டுத் தொழுவமா?” என்று அக்கதை முடிகிறது. பெண்களுக்குத் திருமணம் என்பது வாழ்வாகவும், ஆண்களுக்கு அது ஒரு நிகழ்ச்சியாகவும் அமைந்து விடுகிறது. திருமண பந்தத்தில் ஆணாதிக்கம் தலைதூக்கிப் பெண்ணடிமைத்தனத்தை வளர்க்கிறது. வாயில்லாத ஜீவனாகிய பசு எப்படி மதிக்கப்படுகிறதோ அந்த அளவு மதிப்புதான் பெண்ணுக்கும் என்பதைத் தான் இக்கதை வழி விந்தன் எடுத்துக் காட்டியுள்ளார். பெண்கள் வாழ்கிறார்கள் என்றால் அச்சொல் போலியானது என்பதை இக்கதை எடுத்துக் காட்டுகிறது. பெண்கள்
‘பதிவிரதா தர்மம்’ என்ற பெயரில் கணவனுடைய எச்சிலைச் சாப்பிடுவதைப் பேசும்
விந்தன், பெண்ணுக்கு எல்லாரும் சாப்பிட்டு எஞ்சிய மிச்சமே உணவு என்று வருந்துகிறார்.
ஒவ்வொரு தமிழ்ப் பெண்ணும் பல நாட்கள் தங்களுடைய உணவை விட்டுக் கொடுத்துவிட்டுப்
பட்டினி கிடக்கின்றனர். இதைக் கதைநாயகி சுட்டிக் காட்டுவதுடன்,
என்று கூறி வருந்துவதாகக்
காட்டியுள்ளார். மேலும் அவர்கள் ‘கற்பு’ என்ற கருத்தாக்கத்தின் பேரில் அடிமைப்பட்டுக்
கிடப்பதையும்,
என்ற அடிகள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார். மொத்தத்தில் பெண்கள் எந்தவித உரிமையுமின்றி வாழ்நாள் முழுவதும் அடிமைப்பட்டுக் கிடப்பதை விந்தனின் கதைகள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. |