2.0 பாட முன்னுரை
இக்காலத் தமிழ் இலக்கிய வகைகளுள் புதினமும் ஒன்று.
தமிழ்ப் புதின எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க பெண்
எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன். இராஜம் கிருஷ்ணனின்
நாவல்கள் எந்த வகையைச் சார்ந்தவை என்பது பற்றியும், அந்த
நாவல்களில் பேசப்படும் கதைக்கரு, சமூகச் சீர்திருத்தப்
போக்கு, கதைமாந்தர் படைப்பு, நாவல்களில் கையாளும்
உத்திகள் ஆகியவை பற்றியும் இப்பாடத்தில்
விளக்கப்படுகின்றது.
|