5.0 பாட முன்னுரை
தமிழ் இலக்கிய உலகில் கருத்துச் செறிவும், சிறந்த
நடையும் கொண்ட நாவல்களின் வரிசையில் இடம் பெற்ற
அரிய நாவல் புதிய மொட்டுகள். சமதர்ம சமுதாயத்தைக்
காணவிழையும் பொன்னீலனின் புதிய மொட்டுகளில்
காணப்படும் சமுதாயச் சிந்தனைகளும், உத்தி முறைகளும்
இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.
|