தமிழ் நாவல் இலக்கியத்தில் தனக்கென ஒரு
தனியிடத்தைப் பெற்றவர் பொன்னீலன். சமூக வளர்ச்சிக்கான
இலக்கியத் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சிறந்த
எழுத்தாளர்களுள் இவரும் ஒருவர். இந்தப் பாடம்
பொன்னீலனை அறிமுகம் செய்து அவர் எழுதிய புதினங்கள்
வழி வெளிப்படும் அவருடைய சமுதாயப் பார்வை,
பாத்திரப் படைப்பு, நடைத்திறன் ஆகியவற்றை விளக்குகிறது.
|