6.0 பாட முன்னுரை
அறிவியல் யுகம் இது. எங்கும் எதிலும் அறிவியல்
ஊடுருவும் நேரம். எனவே மக்கள் இலக்கியமாகிய நாவலிலும்
அறிவியல் நுழைந்ததில் வியப்பில்லை. அறிவியல் புதினம்
எழுதிய முன்னோடி சுஜாதா. தமிழ் இலக்கிய உலகில்
அறிவியல் செறிவும் புதுமை நடையும் கொண்ட நாவல் என்
இனிய இயந்திரா. இந்நாவலில் அவர் மக்களாட்சி மாறி
எதிர்காலத்தில் அறிவியல் ஆட்சி மலர்ந்திருப்பதாகக்
கற்பனையாகப் படைத்துள்ளார். அவர் கையாண்டுள்ள
உத்திகளும் அறிவியல் செய்திகளும் இப்பாடத்தில்
விளக்கப்படுகின்றன.
|