பாடம் - 1

P10211 உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிச் சொல்கிறது. உரைநடையின் தொன்மை, உரையாசிரியர்களின் தொண்டு, உரைகளின் மூலம் வெளிப்படும் அரிய செய்திகள் ஆகியவற்றைக் கூறுகிறது. காலந்தோறும் இடம்பெற்ற உரைநடையின் வளர்ச்சியை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.

  • உரையாசிரியர்கள் பழைய பாடல்களிலுள்ள சொற்களுக்கும் தொடர்களுக்கும் தந்துள்ள நுட்பமான கருத்துகளையும் விளக்கங்களையும் அறிந்து மகிழலாம்.

  • உரைநடை அவ்வப்போது மாறி வந்ததையும் வளர்ச்சி அடைந்ததையும் அறிந்து கொள்ளலாம்.

  • மூலநூலாசிரியர் கண்டு கேட்டு உணர்ந்து எழுதிய பாடல்களைப் படித்து உணர்ந்த உரையாசிரியர்கள், தம் கூர்மையான பார்வையின் மூலம் எளிய உரையாக எழுதியுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

 

பாட அமைப்பு