பாடம் - 4

P10214 உ. வே. சா. உரைநடை

E



இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ் உரைநடை வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்ற உ.வே. சாமிநாதையர் அவர்களைப் பற்றிச் சொல்கிறது. இவர் ‘தமிழ்த் தாத்தா’ என்று போற்றப்படுவதைக் குறிப்பிடுகிறது. அவருடைய உரைநடைத் திறனை இந்தப் பாடம் விளக்குகிறது.



இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.

  • தமிழ் நூல்களை அச்சில் கொண்டு வருவதைத் தம் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்ட உ.வே.சா. அவர்களின் உரைநடை மூலம் அவர் காலத்துத் தமிழ்நடையைப் புரிந்து கொள்ளலாம்.
  • உ.வே.சா. அவர்களின் ஆளுமை, தனித்தன்மை, அறிவு, இலக்கியப் பயிற்சி ஆகியவற்றை அவருடைய உரைநடை மூலம் அறிந்து கொள்ளலாம்.
 

பாட அமைப்பு