|
மக்களிடையே
இயற்கையாகப் பரவிக் கிடக்கும் மகிழ்வுணர்ச்சி பல அழகுக் கலைகளுக்குத்
தோற்றுவாயாக அமைந்தது. குறிப்பாக மக்களிடம் மிகுந்து காணப்படும் விளையாட்டு
உணர்ச்சியும், போலச் செய்தல் உணர்ச்சியும் நாடகக் கலையின் மூலங்கள் ஆகும்.
விளையாட்டுணர்ச்சி நடனத்தை வளர்த்தது. போலச் செய்தல் நாடகத்தை வளர்த்தது.
|
|