தமிழ் நாடக வளர்ச்சி நிலைகளைச் சிலப்பதிகாரம்
தான்
முதன் முதலில் சுட்டிக் காட்டுகிறது. வேத்தியல், பொதுவியல்
ஆகிய கூத்து வகைகளும் அகக்கூத்து,
புறக்கூத்து
ஆகியனவும் மாதவி ஆடிய பல்வகைக்
கூத்துகளும்
சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன. தமிழ் நாடக வளர்ச்சியில்
இது ஒரு நிலை.
பொம்மலாட்டம், தோல்பாவைக் கூத்து,
நிழற்பாவைக்
கூத்து ஆகிய அடிப்படைகளில் தமிழ் நாடகம் வளர்ச்சி
அடைந்தது இன்னொரு நிலை.
குறவஞ்சி, பள்ளு, நொண்டி நாடகம்,
விலாசம் எனக்
கதைகளின் அடிப்படையில் நாடகம் வளர்ச்சி அடைந்தது
மூன்றாம் நிலை.
இவை அனைத்தும் அடிப்படையாகக் கொண்டும்
வட
இந்தியாவிலிருந்து புதிதாக வந்த நாடக அமைப்புகளையும்
தழுவிப் புதிய நாடக அமைப்பைப் பெற்றது
19 ஆம்
நூற்றாண்டு நிலை. |