1875ஆம் ஆண்டு வாக்கில் சென்னையை
நோக்கி
இரண்டு புதிய நாடகக் கம்பெனிகள் வந்தன.
1) சாங்கிலி நாடக சபை
2) பார்சி நாடகக் கம்பெனி
சாங்கிலி நாடக சபை
பூனாவிலிருந்து சென்னைக்கு
வந்தது. சென்னை, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இவர்கள்
நாடகங்கள் நடத்தினர். நாடகம் தொடங்குமுன்,
விநாயகர்,
சரஸ்வதி ஆகியோருக்குப் பூஜை செய்துவிட்டு, சூத்திரதாரனும்
விதூஷகனும் நாடகக் கதையைச் சுருக்கமாகச் சபையினர்க்கு
எடுத்துக் கூறும் வழக்கம் இச்சபையினரால் ஏற்பட்டது.
பார்சி
நாடகக் கம்பெனியால், நாடகத் திரைச் சீலைகளை
அமைப்பதில் புதிய மாற்றம் ஏற்பட்டது.
இந்த மாற்றங்களை எல்லாம் மனத்தில் கொண்டு
புதுமுறையில் நாடகங்கள் நடத்தி வெற்றி
கண்டவர்
கோவிந்தசாமி ராவ் என்பவராவார். தமிழ் நாடகம் புத்துயிர்
பெற்றதில் இவர் பங்கு கூடுதலானது ஆகும்.
|