புராண, இதிகாசக் கதைகள், ஸ்தல புராணக் கதைகள்,
சிறு தெய்வ வணக்கக் கதைகள், சமயத் தொண்டர்களின்
கதைகள் ஆகியவை இவ்வகை நாடகங்களில் இடம்
பெற்றுள்ளன.
நாட்டுப்புற மக்களின் கலை இரசனைக்கேற்ப
நாட்டுப்புறத் தெய்வம் பற்றிய கதைகளும், நாட்டுப்புறத்
தலைவர்கள் பற்றிய கதைகளும் நாடகங்களாக ஆக்கம்
பெற்றுள்ளன. இராமாயணம், மகாபாரதம் ஆகிய
கதைகளும்
அதன் கிளைக்கதைகளும் சமூகத்தின்
அனைத்து மக்களுக்கான
நாடகங்களாக ஆக்கம்
பெற்றுள்ளன.
பெரிய புராணம், கந்த புராணம்,
திருவிளையாடற்
புராணம் ஆகியவற்றை ஒட்டியும் பல
நாடகங்கள் உருவாகி
இருக்கின்றன.
ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாடகம் (1916),
மாணிக்கவாசகர்
(1919), திருஞான சம்மந்தர் சரித்திர
நாடகம் (1929),
திருநாவுக்கரசர் நாடகம் (1969) ஆகிய
சைவ சமய
நாடகங்களும், தொண்டரடிப்
பொடியாழ்வார் (1929), மார்கழி
நோன்பு அல்லது ஸ்ரீ
ஆண்டாள் நோன்பு (1968) ஆகிய
வைணவ
நாடகங்களும் நடிக்கப் பெற்றுள்ளன. |