5.0 பாட முன்னுரை
தமிழ் நாடக உலகில், நாடக மூவர் என்று அழைக்கப் பெறுபவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரும் ஆவர். வலுவிழந்தும், பொலிவிழந்தும் இருந்த தமிழ் நாடகக்கலை இவர்களால் புத்துயிர் பெற்றது; புதிய ஊக்கம் கொண்டது. அவர்களில் சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி இங்குத் தொகுத்துக் கூறப்படுகிறது.