தமிழ்
நாடகத் தலைமை ஆசிரியர் என்றும், நாடக உலகின்
இமயமலை என்றும் போற்றப்பட்ட தவத்திரு சங்கரதாஸ்
சுவாமிகளின் பிறப்பு, கல்வி, இசைப்பயிற்சி ஆகியவற்றைக்
கூறுகிறது.
சுவாமிகள் நடிகராகவும்,
நாடக ஆசிரியராகவும், நாடக
இயக்குநராகவும் திகழ்ந்ததைச் சொல்கிறது. தமிழில்
பெரும்புலமை பெற்ற அவரது முயற்சியில் தமிழ் நாடகம்
எவ்வாறு மொழித்தகுதி பெற்றது என்பதனைச் சொல்கிறது.
தமிழ்
நாடக மேடையைச் சுவாமிகளின் நாடகங்கள் கால்
நூற்றாண்டுக் காலம் எவ்வாறு ஆட்சி செலுத்தின என்பதைச்
சொல்கிறது. |