1.0 பாட முன்னுரை
 

தொடக்கத்தில் எல்லாக் கலைகளும் பக்தியைப் பரப்பப் பயன்பட்டு வந்தன. இதனால் இதிகாசங்களும் புராணங்களும் கலைவழியே வெளிப்பட்டன. நாட்டிய நாடகங்கள் இசை நாடகங்கள் கதா காலட்சேபங்கள் என எல்லாவற்றிற்குமே புராணக் கதைகள் அடிப்படையாயின. புராணக் கதைகளை நாடக ஆசிரியர்கள் தங்கள் படைப்பு ஆற்றலுக்குத் தக்கவாறு பல மாற்றங்களை ஏற்படுத்தி நாடகங்களாக ஆக்கினார்கள். காலப்போக்கில் முடிந்த அளவு உலக இயற்கைக்கு ஒத்த முறையிலும் நம்பத் தகுந்த முறையிலும் காட்சிகளை அமைத்து நாடகங்களை உருவாக்கினார்கள். இவ்வாறு தமிழில் புராண நாடகங்கள் நடிப்பதற்காகவும் படிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.