2.0 பாட முன்னுரை

கூத்து தமிழகத்தின் பழைமையான நாடகக் கலைவடிவம். கர்நாடகத்தில் யட்சகானம், கேரளாவில் கதகளி என்பன போன்ற பழம் கலைவடிவங்கள் இருக்கின்றன. தமிழகத்தில் கூத்து, பொதுமக்களின் கலைவடிவமாக இருந்து வந்திருக்கிறது. தெருக்கூத்து என்று அழைக்கப்படும் அதன் வரலாறு, அமைப்பு, கதைகள், நிகழ்த்து முறைகள், கூத்துக் கலைஞர்கள் பற்றிய செய்திகள், பார்வையாளர் பங்கு ஆகிய செய்திகளை இங்குக் காண்போம்.