4.8 தொகுப்புரை |
சமூக நாடகங்கள் சமூக விழிப்புணர்வின் காரணமாக உருவாகின. விடுதலைப் போரிலும் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதிலும் இவற்றின் பங்கு அளவிடற்கரியது. போராட்ட ஆயுதங்களாகச் சமூக நாடகங்கள் செயலாற்றின. மக்களின் குடும்ப வாழ்வும், சமூக வாழ்வும் மேம்படும் வகையில் பல செய்திகள் சமூக நாடகங்களின் வாயிலாக உணர்த்தப்பட்டுள்ளன. மக்களிடமே நாடகத்தைக் கொண்டு செல்லும் வகையிலும் மக்களின் பங்கேற்பை மிகுதிப்படுத்தும் வகையிலும் நவீன சோதனை நாடகங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. சமூக நாடகங்கள் சமூக வரலாறாகவே திகழ்கின்றன. |
1. |
படித்த பெண்கள் நாடகத்தின் ஆசிரியர் யார்? | விடை |
2. |
கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு என்ற வசனம் இடம்பெற்ற நாடகம் எது? | விடை |
3. |
கல்கி, அண்ணாவை யாருக்கு இணையானவர் என்று பாராட்டினார்? | விடை |
4. |
டி.கே.எஸ். குழுவினரின் நாடக லட்சியம் என்ன? | விடை |
5. |
நவீன நாடகங்கள் உருவாகக் காரணமாக இருந்த வங்காள நாடக ஆசிரியர் யார்? | விடை |