5.6 தொகுப்புரை |
நாடகத் தயாரிப்பாளர், படைப்பாளர், நடிகர்கள், ஒலிப்பதிவாளர்கள் முதலானவர்களின் கூட்டுறவில் உருவாகும் ஆற்றல் மிக்க இலக்கிய வடிவம் வானொலி நாடகம். இது, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம், படிக்கும் நாடகம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது. குரல், ஒலிக்குறிப்பு, இசை முதலானவற்றால் கற்பனையான உலகைப் படைத்துக் காட்டுகிறது. பொழுதுபோக்காகவும் அறிவூட்டுவதாகவும் திகழும் வானொலி நாடகத்தின் தாக்கம் மிகப் பெரியது. வானொலி நாடகத்தின் கட்டமைப்பு நுட்பத்தை உணர்ந்து சுவைத்தால் மிகுதியான இலக்கிய இன்பம் கிடைக்கும். |
1. |
வானொலி நாடக நிகழ்ச்சிகளின் குறிக்கோள்கள் எவை? | விடை |
2. |
தொடர் நாடகத்தை எதனுடன் ஒப்பிடலாம் ? | விடை |
3. |
இசை நாடகத்திற்கு எடுத்துக்காட்டுகள் தருக. | விடை |
4. |
கல்கியின் எந்த வரலாற்று நாவல், நாடகமாக ஆக்கப்பட்டது? | விடை |
5. |
அலிகள் பிரச்சினை பற்றிய வாடாமல்லி நாடகத்தின் ஆசிரியர் யார்? | விடை |