6.0 பாட முன்னுரை

உலகம் முழுதும் தொலைக்காட்சி நாடகங்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கின்றன. இவற்றின் வளர்ச்சி மிக விரைவானது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாதியளவு இடத்தை இவை பிடித்திருக்கின்றன. தமிழ்த் தொலைக்காட்சியிலும் இந்நிலை காணப்படுகிறது. திரைப்படத்திற்கு இணையாக உருவெடுத்திருக்கும் இக்கலை குறித்து அறிந்து கொள்வது நாடகக்கலை அறிவுக்கு இன்றியமையாததாகும். தொலைக்காட்சி நாடகங்களின் வரலாறு, அவற்றின் கதை அமைப்புகள், பிற ஊடகங்களோடு அவை கொண்டிருக்கிற தொடர்பு, அவற்றின் தனித்தன்மை, தயாரிப்பு முறை, அமைப்பு முறை, நாடக நிகழ்வுகள் ஆகியவை குறித்துக் காண்போம்.