6.7 தொகுப்புரை |
கல்வி மேம்பாட்டிற்காகவும், வேளாண்மை மேம்பாட்டிற்காகவும் தொடங்கப்பட்ட தொலைக்காட்சி வணிகச் சாதனமாக ஆக்கப்பட்டது. அதன் விளைவாகத் தொலைக்காட்சி நாடகங்கள் உருவாயின. மேடை நாடகத்திற்கும் திரைப்படத்திற்கும் இடைப்பட்ட தன்மை கொண்ட தொலைக்காட்சி நாடகத்தின் செல்வாக்கு அளவிடுதற்கு அரியது. குடும்ப நிகழ்வாக மாறிவிட்ட தொலைக்காட்சி நாடகம் வணிகச் சாதனமாகவும் இயங்குகிறது. அரசு தொலைக்காட்சி ஒளிபரப்புகிற நாடகங்களுக்கும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புகிற நாடகங்களுக்கும் வேறுபாடு குறைந்து வருகிறது. பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் கதைகளும் மாயாஜாலக் கதைகளும் நாடகங்களாக ஆக்கப்படுகின்றன. தொழில் நுட்பங்களைக் கொண்டு தொலைக்காட்சி நாடகங்கள் பயனுள்ள செய்திகளைச் சொல்ல முடியும். |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
||
1. |
திரைக்கதை என்பதன் விளக்கம் யாது? |
விடை |
2. |
அரசு தொலைக்காட்சியில் நடிகர்களை எப்படித் தரம் பிரிக்கிறார்கள்? |
விடை |
3. |
அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முதல் வண்ண நாடகம் எது? |
விடை |
4. |
தொலைக்காட்சி நாடகமாக ஆக்கப்பட்ட இரண்டு புதினங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. |
விடை |
5. |
தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் மூவகைத் தொடர்கள் யாவை? |
விடை |