கவிமணி 1876ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் நாள்
பிறந்தார். தந்தை பெயர் தேரூர் சிவதாணு; தாய்
ஆதிலெட்சுமி. முதலில் படித்தது மலையாளம். தேரூர்
வாணந்திட்டு திருவாவடுதுறை ஆதீனம் சாந்தலிங்கத்
தம்பிரானிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார்.
திருவனந்தபுரம் மகளிர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலும்
ஆசிரியராகப் பணியாற்றினார். திருவனந்தபுரம் மகாராசா
பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப்
பணிபுரிந்தார். பின்னர், திருவனந்தபுரம் மகாராசா பெண்கள்
கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
|