கவிமணி தேசிக விநாயகம், “உள்ளத்து உள்ளது கவிதை; இன்பம் உருவெடுப்பது கவிதை” என்ற பாடலைக்
கவிதைக்கு இலக்கணமாகத் தந்தவர். குழந்தைகளுக்காகப் பாடியவர்.
தமிழ் மொழிப் பற்றாளர். கவிதை எழுதுவதில் வல்லவர். இறையுணர்வு
மிக்கவர். சாதி, மத பேதங்களைச் சாடியவர். காந்தியச் சிந்தனையாளர்.
தேசவுணர்வுடையவர். அவர் கவிதைகள் வழியாக அவரது கவிதை உள்ளத்தைக்
காணலாம். இதுவே இந்தப் பாடத்தின் நோக்கம்.