தன்மதிப்பீடு : விடைகள் - II
5)
பெண்கள் விடுதலைக் கும்மி பாடல் மூலம் அறியப்படும் கருத்துக்கள் யாவை?

1) பெண் அடிமைப்பட்டிருக்கிறாள் என உணர்ந்து கொள்ளலாம்.

2) பெண்ணுக்கு மட்டும் கற்பு தேவை என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாது ஆணுக்கும் அது தேவை என வலியுறுத்தலாம்.

3) பெண்கள் ஆளுமை மிக்கவர்கள். பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் வேதம் படிக்கவும், சாதம் படைக்கவும் திறமை பெற்றவர்கள் என உணர்த்தலாம்.