‘முன்னுக்குப்பின் முரண்படுகிறார் இவர். முரண்பாடுகளின்
மொத்த உருவகமாகக் காணப்படுகிறார்’ என்பதே அது. இதற்கு என்ன காரணம்?
அரசியல் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டார். மாறும்
கட்சிகளின் கொள்கைகளை விளக்கத் தம் கவிதையை, எழுத்தைப் பயன்படுத்தினார். இதனால்
பல முரண்பாடுகள் கொண்டவராகக் காட்சியளிக்கிறார்.
பகுத்தறிவு இயக்கத்தில் இருந்தபோது கடவுள்
இல்லை என்னும் நாத்திகக் கருத்துகளைப் பாடினார்.
பிற்காலத்தில் தேசிய இயக்கத்தில் சேர்ந்த பின்னர்,
படித்தாலே மனம்
உருகும் பக்திப் பாடல்கள் பாடிக் குவித்தார்.
திராவிட இயக்கத்தில்
இருந்தபோது ஆட்சிமொழிச் சட்டத்தை எதிர்த்தார். போராடினார்.
போராட்டங்களைக் காவியப் பொருள் ஆக்கிக்
கவிதைகள் படைத்தார். ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட
மொழியை நையாண்டிச்
சொற்களால் வசை பாடினார். தேசிய இயக்கத்துக்கு மாறிச்
சென்றபின் கருத்துகளை மாற்றிக் கொண்டார்.
முன்பு தூற்றியவை எல்லாவற்றையும் போற்றிக்
கவிதை பாடினார்.
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்
என்னும் பெருமித உணர்வு கொண்டவர்
கண்ணதாசன். அதனால் உள்ளே எப்படியோ அப்படியே
வெளியிலும் வாழ்ந்தவர். |