3.0 பாட முன்னுரை


காலத்தின் வேகத்தில் தமிழ்க் கவிதை இயல்பான ஒரு புது வளர்ச்சியைப் பெற்றது. புதுக்கவிதை தோன்றியது. ஆங்கிலத்தில் ‘New Poetry’, ‘Modern Poetry’ எனத் தோன்றிய சொல்லாக்கங்களுக்கு இணையாகத் தமிழில் அமைந்த சொல்லாக்கமே புதுக்கவிதை என்பது. 1960-ஆம் ஆண்டில்தான் இந்தக் கவிதை வகை இப்பெயரைப் பெற்றது. என்றாலும், 1934-ஆம் ஆண்டிலேயே ஒரு கவிஞர் இவ்வகைக் கவிதைப் படைப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். அவர்தாம் ந.பிச்சமூர்த்தி. அவரையும் அவரது கவிதைகள் பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் இப்பாடப் பகுதி அமைந்துள்ளது.