கவிஞர் சிற்பி இக்காலக் கவிஞர்களுள் குறிப்பிடத்
தக்க
ஒருவர். இவர் 1960 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். மரபுக்
கவிதையில் தொடங்கிப் புதுக்கவிதையில்
படைப்புகளைத்
தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.
மரபின் நல்ல
இயல்புகளைவிட்டு விலகிவிடாமல் புதுக்கவிதை
படைப்பது
இவரது தனிவழி. இதனால் செழுமையான ஒரு
தமிழ்நடையில்
எழுதுகிறார். இவரது கவிதைகள் பற்றியும் அவற்றின் சிறப்புகள்
பற்றியும் அறிந்து கொள்ளும் வகையில் இந்தப் பாடப் பகுதி
அமைக்கப்பட்டுள்ளது. |