உவமை, உருவகம், சொல் ஓவியமான படிமம் இவற்றைச் சிற்பி
ஆளும் திறனை அறிய, நாம் முன்னால் கண்ட முன்னுரை, தாஜ்மகால் ஆகிய கவிதைகளை மீண்டும்
ஒருமுறை படியுங்கள்.பேருந்துக் கூட்டத்தில்
அகப்பட்ட இளம்பெண்
யாரோ தொட்டதும்
சீறிச் சினத்தல் போல்
சிவந்து சுரீல் எனச்
சீறியது தீக்குச்சி
(இரவு - இறகு)
உரசியதும் தீக்குச்சி தீப்பற்றுவதற்குப் புதிய உவமை
கூறியுள்ளார்.
சிற்பியின் சிறந்த கவிதைகள் பற்றி நிறைய எழுதலாம்.
இந்தப் பாடத்தில் இடம் இல்லை. ‘சர்ப்பயாகம்’ நூலில் உள்ள முள்...முள்..முள்
என்னும் கவிதையைப் படித்து இவரது புதுமைச் சிந்தனைகளைச் சுவையுங்கள். மலர்கள்
என்னும் கவிதையில் அழகுணர்ச்சியை அனுபவியுங்கள். |