5.4 தமிழில் புகுத்திய புதுமைகள் | |
தமிழ்க் கவிதை இலக்கியத்தில் அப்துல் ரகுமான் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய
முன்னோடி ஆவார். இதனால் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு தனிச் சிறப்பிடத்தை அவர்
பெறுகிறார். |
|
|
|
சர்ரியலிசம் என்னும் இந்தப் படைப்பாக்க முறையைக் கையாண்டு தமிழில் கவிதை நூல்
(பால்வீதி) செய்தவர் இவர். |
|
|
|
இவை அரபி, உருது இசைப்பா வடிவங்கள் ஆகும். இவற்றைத், தமிழில் முதன்முதலில்
எழுதி அறிமுகம் செய்துள்ளார். மின்மினிகளால் ஒரு கடிதம்
தமிழ் கஸல்களின் முழுத்தொகுதி. நான்
உன் மூச்சு |
|
|
|
இப்போது தமிழில் பலரும் எழுதிவரும் ஹைக்கூ
என்னும் ஐப்பானியக் குறுங்கவிதை வடிவத்தை முதலில் தமிழில் அறிமுகம் செய்தவரும்
இவர்தான். சிந்தர் என்ற தலைப்பில் பால்வீதியில்
ஐந்து ஹைக்கூக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று- இரவெல்லாம் காதல் நினைவுகள் உறங்க விடாமல் தொல்லை செய்கின்றனவாம். இவ்வாறு, அப்துல் ரகுமான் தமிழ் இலக்கிய உலகுக்குப் புதுமைகள் பலவற்றை அறிமுகம் செய்துள்ளார் என்று அறியலாம். அப்துல் ரகுமான் மிகச் செறிவான, எண்ணிக்கையில் மிகுதியான பல சிறந்த கவிதைகளைப் படைத்துள்ள பெருங்கவிஞர். இதனால் தான் கவிக்கோ என்று சிறப்பிக்கப்படுகிறார். (கோ = அரசர்) இவரது படைப்புகளில் நாம் இப்பாடத்தில் அறிந்து கொண்டவை மிகமிகச் சிறிய அளவே ஆகும். இவரது நூல்களைத் தேடிப் படித்துக் கவிதைச் சுவைப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
நண்பர்களே, உங்கள் கவிதை நுகர்வுத் திறனைச் செழிப்பாக்கவும்,
நீங்களாகவே கவிதை வாசிப்புப் பயிற்சி பெற்றுக் கொள்ளவும், அப்துல் ரகுமானின்
ஆலாபனை நூலில் இருந்து நீராக என்ற கவிதையின்
சில அடிகள் கீழே தரப்படுகின்றன. |
|
நீராக |
|
நீரிலிருந்து பிறந்தவனே இக்கவிதை மிக எளிதானதாக எழுதப்பட்டுள்ளது. ஆயினும் நுண்மையான பொருள்நலம் கொண்டது. பிறர் உதவியின்றி நீங்களாகவே படித்து, சிந்தித்து, உணர்ந்து கொள்ள முயலுங்கள். |