நண்பர்களே ! இதுவரை அப்துல் ரகுமானின் கவிதைகள் பற்றிய
சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை
அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள் :
- அப்துல் ரகுமான் பற்றியும் அவரது கவிதைப் படைப்புகள்
எவை என்பது பற்றியும் சுருக்கமாகத் தெரிந்து கொள்ள
முடிந்தது.
- அப்துல் ரகுமானின் கவிதைப் படைப்புக்குப் பொருளாய்
அமைந்த உள்ளடக்கங்கள் பற்றி அறிந்து
கொள்ள
முடிந்தது.
- அவரது கவிதைகளில் அடங்கியுள்ள கற்பனை வளம்,
சொல்லாட்சி, உவமை, உருவகம், படிமம் போன்ற கலைத்
திறன்களைச் சான்றுகள் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது.
- அவர் தமிழ்க் கவிதையில் அறிமுகப்படுத்திய புதுமைகள்
பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
- சுவைத்துத் திளைப்பதற்காகவும் நுகர்தல் பயிற்சிக்காகவும்
ஒரு கவிதையைப் படித்துக் கொள்ள முடிந்தது.
|