பாடம் - 4

P10334 சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று குறவஞ்சி இலக்கியம். குறவஞ்சி இலக்கிய வகையில் இடம் பெறும் நூல்களில் ஒன்று சரபேந்திர பூபாலக் குறவஞ்சி ஆகும்.

இந்த நூலின் பெயர்க்காரணம், பாட்டுடைத் தலைவர் வரலாறு, நூல் ஆசிரியர் பற்றிய செய்திகள், நூலின் அமைப்பு, நூலில் கூறப்படும் செய்திகள் என்பன விளக்கப்படுகின்றன.

சில குறிப்பிட்ட பாடல் பகுதிகள் சான்றுகளாகத் தரப்படுகின்றன.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இப்பாடத்தைப் படித்து முடிக்கும் பொழுது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • குறவஞ்சி இலக்கிய வகை நூல்களில் ஒன்றாகிய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற நூலை இனம் காணலாம்.
  • இந்த நூல் இப்பெயர் பெற்றதன் காரணத்தை அறியலாம்.
  • பாட்டுடைத் தலைவர் பற்றிய செய்திகளைப் புரிந்து கொள்ளலாம்.
  • இந்த நூலின் ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
  • இந்த நூலின் அமைப்பைச் சுருக்கமாக அறியலாம்.
  • இந்த நூலில் இடம்பெறும் செய்திகளின் விளக்கங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு