தஞ்சைவாணன் கோவை நாற்கவிராச நம்பி
இயற்றிய நம்பி அகப்பொருள் என்ற இலக்கண நூலை
அடிப்படையாகக் கொண்டு அதற்கு உதாரண இலக்கியமாக எழுதப்பட்டுள்ளது.
நம்பி அகப்பொருள் நூலில் களவியல், வரைவியல்,
கற்பியல் ஆகிய இயல்களில் தலைவன் தலைவியின் அகவாழ்க்கை நிகழ்வுகளின் இலக்கணம்
கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே இக்கோவை நூலிலும்
களவியல், வரைவியல், கற்பியல் என்று மூன்று இயல்கள் உள்ளன.
நம்பி அகப்பொருளில் இம் மூன்று இயல்களிலும்
உள்ள தலைவன், தலைவி, தோழி, தாய் போன்றோர் பேசும் பேச்சுகள் (கூற்றுகள்) தஞ்சைவாணன்
கோவையில் அதே வரிசையில் உதாரணப் பாடல்கள் கொண்டு
விளக்கப்படுகின்றன.
எனவே நம்பி அகப்பொருள் இலக்கணத்திற்கு உரிய
முழுமையான இலக்கியம் தஞ்சைவாணன் கோவை என்பதை
உணரலாம்.
|