2.4.1
வீரம்
பகைவர்களுக்கு அச்சத்தைத் தரக்கூடிய வீரமுடையவனாகச்
சந்திரவாணன் வர்ணிக்கப்படுகிறான்.
.......................எதிர்ஏற்ற
தெவ்வர்
தம் ஊரை முப்புரமாக்கிய வாணன்(197)
...................................எதிர்த்த ஒன்னார்
மன்மலை வேழம் திறைகொண்ட சேய்தஞ்சை
வாணன்(16)
சீயங்கொலோ எனத் தெவ்வென்ற வாணன்(29)
.................................... அடையார் தமக்கு
மகத்தில் சனி அன்ன சந்திரவாணன்(48)
(தெவ், தெவ்வர், ஒன்னார், அடையார் =
பகைவர்; சேய் = முருகன்; வேழம் = யானை; திறை = கப்பம்; சீயம்
= சிங்கம்; மக = மக நட்சத்திரம்)
‘தம்மை எதிர்த்த பகைவர்களின் ஊரை, சிவபெருமான் முப்புரத்தை
எரித்தது போல எரித்தான்; பகைவர்களின் போர் யானைகளையே திறையாகக் கொண்ட முருகனைப்
போன்றவன்; பகைவர்க்குச் சிங்கம் போலக் காட்சி தரக்கூடியவன்; மேலும் மகநட்சத்திரத்தில்
வரும் சனி அழிவைத் தருவதுபோலப் பகைவருக்கு அழிவைத் தரக்கூடியவன்’ என்று அவனது
வீரம் சிறப்பிக்கப்படுகிறது.
|