3.4 கவிதைச்சிறப்பு | |||
342 கண்ணிகளை உடைய விக்கிரமசோழன் உலா சீர்
தந்த தாமரையாள் கேள்வன் எனத் தொடங்குவதைக் காணலாம். சீர் தந்த என்று
முதற்சீர் அமைந்துள்ளது. சீர் என்பது மங்கலச் சொல்லாதலின் மங்கலப்பொருத்தம்
அமைந்தது. கவிதைக்கு அழகு சேர்க்கும் அணிநலன்கள் படிப்பவர்க்கு ஆர்வத்தை ஊட்டுவனவாய்
இந்நூலில் அமைந்து கிடக்கக் காணலாம். ஒட்டக்கூத்தரின் கற்பனை நயத்தை இவ்வுலாவில்
பல இடங்களில் காணலாம். கவிச்சக்கரவர்த்தியாய் ஒட்டக்கூத்தர் விளங்குவதை அவருடைய
கற்பனைத் திறம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அணிகளுள் எல்லாம் உயர்ந்தும்
சிறந்தும் விளங்குவது உவமை அணி, பொருத்தமான இடங்களில் கையாளும் பொருத்தமான
உவமைகள் படிப்பவர் சுவைத்து மகிழும் திறத்தவை. |
|||
3.4.1 அணிநயம் | |||
தன்மை நவிற்சி அணி, உயர்வு நவிற்சி அணி, ஏதுவணி, உவமை அணி, உருவக அணி போன்ற பல அணிகள் ஆங்காங்கே அமைந்து விக்கிரமசோழன் உலாவைச் சிறப்பிக்கின்றன.
மடந்தைப் பருவப் பெண்ணொருத்தி தன் தோழியுடன் பந்து
விளையாடும் அழகை எவ்வளவு கற்பனை நயத்துடன் பாடுகிறார் ஒட்டக்கூத்தர் என்று
பாருங்கள். பந்துவிளையாடுவதால் அவள் கை சிவக்கும் என்று கூறுவது போல் அவள்
வளைகள் ஒலித்தன. இடை வருந்தும் என்று கூறுவதுபோல் அவள் இடையில் அணிந்திருந்த
மேகலை ஒலித்தது. சிற்றடி வருந்தும் என்று கூறுவதுபோல் காலில் அணிந்திருந்த
சிலம்பு ஒலித்தது. தற்குறிப்பேற்ற அணியில் தன் கற்பனையைப் பின்வருமாறு பாடுகிறார்
ஒட்டக்கூத்தர். செங்காந்தள் அங்கை சிவக்கும் சிவக்கும் என்று அதேபோல,
விந்தமே போலப் புதைய நடந்த பொருப்பே அரசனது பட்டத்து யானையை மலையாக உருவகித்து ஒட்டக்கூத்தர் பாடுவதைக் காணலாம். விக்கிரம சோழனின் பட்டத்து யானையின் சிறப்பைக்
கூறும் அழகைப் பார்ப்போமா? மன்னனது பட்டத்துயானை தானே முழங்குவதல்லால் தனக்கெதிராக
வானமே முழங்கினாலும் அவ்வானத்தைத் தடவி அதற்குப் பட்டமும் கொம்பும் வலிய
துதிக்கையும் இல்லையெனக் கண்டு சினம் தணியும் இயல்புடைய எமராச தண்டம் போன்றது
என்கிறார் ஒட்டக்கூத்தர். தானே முழங்குவ தன்றித் தனக்கெதிர் (யமராச தண்டம் = எமன் கையில் உள்ள தண்டம்) உலா வரும் விக்கிரம சோழனை வர்ணிக்கும் ஒட்டக்கூத்தர், கன்னியும் நர்மதையும் கங்கையும் சிந்துவும் என்கிறார்.
தியாகசமுத்திரம் என்பது விக்கிரம சோழன் பட்டப்பெயர்களுள் ஒன்று. சமுத்திரம்
வந்ததற்கேற்பச் சமுத்திரத்தில் உள்ள பொருள்களும் உடன் வந்தனவாகத் தோன்றும்படி
அமைத்துள்ளார். அரசன் உலா வரும்போது உடன் வந்தனவாகக் கூறும்போது பவளமும்
முத்தும் என்பவைற்றை உலாக்காண வந்த மகளிர் சிவந்த வாயும் பற்களும் ஆகவும்,
மகர மீன்குலம் என்பதை அம்மீன்கூட்டம் போன்ற மகளிர் விழிக்கூட்டங்களாகவும்,
சங்குகளை அம்மகளிர் கண்டங்களாகவும், அவை முழங்குவதை அவர்கள் குரலாகவும் கூறும்
நயம் சிறப்பானது. விக்கிரமசோழன் உலா வரும் அழகைக் காண மங்கையர் (பரத்தையர்)அனைவரும் தெருவெங்கும் வந்து நெருங்கி நின்றனர். மங்கையர் சிலர் மலை போன்ற உயர்ந்த மாடத்தின் கீழ் அடித்தளத்தில் தங்கியிருந்தமையால் அவர்கள் நாகருலகத்து மகளிர் போலத் தோன்றினர். வீணையும் யாழும், குழலும் முழவும் ஒலிக்கப் பதம் பெயர்த்து ஆடும் மகளிர் விஞ்சையர் உலக மாதர் போல இருந்தனராம். மையணிந்த கண்கள் சிறிதும் இமையாத தோற்றமும் மண்ணில் பொருந்தாத மலர்போன்ற பாதமும் அன்றலர்ந்த மாலையும் கொண்டு அழகு குறையாத மகளிர் நிலா முற்றத்தில் நின்ற நிலையில் ஒப்பற்ற அரம்பையர் போலத்தோன்றினராம். (207-212) பேதைப் பருவப் பெண்ணை ஒட்டக்கூத்தர் வர்ணிக்கும் அழகிலேதான் எத்தனை உவமைகள் பாருங்கள். பூமியிலே வந்து பிறந்து வளர்கின்ற பிறை போல்வாள், தோகை முளைக்காத மயில் போல்வாள், இளமையான அன்னப்பெடை போல்வாள் என்று உவமிக்கிறார். (224-230) மடந்தைப்பருவப் பெண் ஒருத்தி “அந்தமில் ஓலக்கடலேழுமொன்றாய் உலகொடுக்கும் காலக்கடையனைய கட்கடையாள்” (387-388) என்று கூறப்படுகிறாள். முடிவில்லாத ஒலியை உடைய ஏழுகடலும் ஒன்றாகச் சேர்ந்து உலகத்தைத் தனக்குள் அடக்குகின்ற யுகமுடிவுக்காலம் போன்ற கடைக்கண்களை உடையவள் என்கிறார். யுகமுடிவு எவ்வாறு உலகினையழிக்குமோ அவ்வாறு இவள் ஆடவர் மனத்தை அழிக்கும் இயல்புடையவளாம். தெரிவைப்பெண் நல்ல வெல்லப்பாகு போன்றவள். வாடாத
பொற்கொம்பு போன்றவள். ஒளி மழுங்காத நிறைமதி போன்றவள். இலக்கணம் கொண்டு எழுதப்படாத
ஓவியம் போன்றவள். இளமையான மயில் போன்றவள். மயக்கம் கொடுக்கும் தேன் போன்றவள்
என்று உவமிக்கப்படுகிறாள். |