நல்லறமாக இல்லறத்தை நடத்துபவன் தந்தை, தாய், குருவை,
இட்ட தெய்வங்களை, சன்மார்க்கம் (நல்லொழுக்கம்) உள்ள மனைவியை, தவறாத சுற்றத்தை,
ஏவாத (குறிப்பறிந்து நடக்கும்) மக்களை, தனை நம்பி வருவோர்களைச் சிந்தை மகிழ்விக்க
வேண்டும் என்று கூறி, தொடர்ந்து. தென்புலத்தோர் வறிஞரைத்
தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்
தேனுவைப் பூசுரர் தமைச்
சந்ததஞ் செய்கடனை என்றுமிவை பிழையாது
தான் புரிந்திடல் இல்லறம் (95) (தென்புலத்தோர் = முன்னோர்; துணைவர் =
உடன் பிறந்தோர்; தேனு = பசு; பூசுரர் = அந்தணர்;
அதிதி = விருந்து; சந்ததம் = எப்போதும்; செய்கடன் =
கடமை; பிழையாது = தப்பாமல்)
என்கிறது இச்சதகம். இத்தகைய இல்லறம் நடத்துவோருக்குத் துறவிகளும் ஈடாக மாட்டார்கள்
என்றும் வலியுறுத்துகிறது.
‘ஒன்றற்கு ஒன்று அழகு செய்வன’ என்ற பாடலில் வாழ்மனை
தனக்கழகு குலமங்கை என்றும், குலமங்கை வாழ்வினுக்கழகு சிறுவர் என்றும், சிறுவர்க்கு
அழகு கல்வி என்றும், கல்விக்கழகு மாநிலம் துதி செய்கின்ற குணமென்றும், குணமதற்கு
அழகு பேரறிவு என்றும், பேரறிவுக்கு அழகு தூயதவம் மேன்மை, உபகாரம், விரதம்,
பொறுமை, பெரியோர்களைத் தாழ்தல், பணிவிடை புரிதல், சீலம் நேசம், கருணை முதலியவையாம்
எனக் குடும்பத்தின் சிறப்புப் பேசப்படுகிறது. |