தன்மதிப்பீடு : விடைகள் - II

1)

அறப்பளீசுர சதகம் குடும்ப அமைப்புப் பற்றிக் கூறுவது என்ன?

குடும்பத்துக்கு இன்றியமையாது வேண்டப்படும் சகோதரர் ஒற்றுமை, பெரியோரிடத்து நடக்கும் முறை முதலியன இளம் பருவத்திலேயே ஒவ்வொருவரும் பயில வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இச் சதகம். கூடப் பிறந்தவர்க்கெய்து துயர் தமது துயர், அவர்கள் கொள்சுகம் தம் சுகமெனக் கொண்டும், அவர் புகழும் பழியும், தமக்குற்ற புகழும் பழியும் போலக் கொண்டும் வாழ வேண்டும் என்று சகோதரர் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. (4)

குடும்பத்தில் எப்படிப் பொருள் சேர்க்க வேண்டும், எப்படிச் செலவழிக்க வேண்டும் என்றும் குடும்பம் எப்படி நடத்த வேண்டும் என்றும் கூறுகிறது.