தன்மதிப்பீடு : விடைகள் - II

2)

எதற்கு எது அழகு? இதை நூல் ஆசிரியர் எவ்வாறு அமைத்திருக்கிறார்?

‘ஒன்றற்கு ஒன்று அழகு செய்வன’ என்ற பாடலில் வாழ்மனை தனக்கழகு குலமங்கை என்றும், குலமங்கை வாழ்வினுக்கழகு சிறுவர் என்றும், சிறுவர்க்கு அழகு கல்வி என்றும், கல்விக்கழகு மாநிலம் துதி செய்கின்ற குணமென்றும், குணமதற்கு அழகு பேரறிவு என்றும், பேரறிவுக்கு அழகு தூயதவம் மேன்மை, உபகாரம், விரதம், பொறுமை, பெரியோர்களைத் தாழ்தல், பணிவிடை புரிதல், சீலம்நேசம், கருணை முதலியவையாம் எனக் குடும்பத்தின் சிறப்புப் பேசப்படுகிறது.