தன்மதிப்பீடு : விடைகள் - II

3) நல்ல புண்ணியம் செய்தவன் யார்?

தம் குலம் விளங்கப் பெரியோர்கள் செய்து வரும் தான தருமங்களை அவன் செய்து வரவேண்டும். தானங்கள் செய்தும், தந்தை, தாய், குருமொழி மாறாது வழிபாடு செய்தும் வரவேண்டும். இங்கித (இணக்கமான) குணங்களும், வித்தையும், புத்தியும், ஈகையும் (நல்லொழுக்கம்), சன்மார்க்கமும் இவையெல்லாம் உடையவனே புதல்வன் என்று சொல்லத் தகுந்தவன். இவனை ஈன்றவனே நல்ல புண்ணியம் செய்தவன் என்கிறது.