கி.பி.
12ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தரால் இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது பாடப்பட்டுள்ள
குலோத்துங்கன் பிள்ளைத் தமிழே முதல் பிள்ளைத் தமிழ் நூலாகும். இது சோழர்களின்
வரலாற்றைக் கூறும் சிறந்த இலக்கியமாகும்.
கி.பி. 17ஆம் நூற்றாண்டில் குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை
பிள்ளைத் தமிழ், முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ் ஆகிய இரண்டும் பக்தி
இலக்கிய வரலாற்றில் பெரும் புகழ் படைத்தவை. கி.பி.18ஆம் நூற்றாண்டில் பகழிக்
கூத்தர் எழுதிய திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் சிறப்புடையது. 19ஆம் நூற்றாண்டில்
அழகிய சொக்கநாதர் பாடிய காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை பாடிய சேக்கிழார் பிள்ளைத் தமிழ் ஆகியவை சிறப்பானவை. மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம் அவர்கள் பத்துப் பிள்ளைத் தமிழ் நூல்களைப் படைத்த பெருமைக்குரியவர்.
|