தன் மதிப்பீடு : விடைகள் - II

 

1) சூளாமணியின் சமயக் கொள்கை யாது?

சூளாமணி சமண சமயக் கொள்கையை உடையது. காப்பிய மாந்தர்கள் அருகதேவனை வணங்கும் வகையில் பல நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டுள்ளன. அருகனை வணங்கினால் பிணி நீங்கும், பிறவி நீங்கும், விசும்பொடு வரம் கிட்டும், ஒளிவிரிந்து மகிழ்வர், மெய்ம்மறந்து உள்மகிழ்வர் எனும் பயன்களை உரைக்கிறது.



முன்