பாடம் - 1

P10421 சூளாமணி

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?


தமிழ் இலக்கிய வகைகளில் காப்பியம் என்றால் என்ன?என்பதைக் குறிப்பிடுகின்றது. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அவற்றுள் சூளாமணி நூலின் பெயர்க்காரணம், ஆசிரியர் வரலாறு, கதை அமைப்பு மற்றும் இக்காப்பியத்தினைச் சிறுகாப்பிய வகையில் சேர்த்துள்ள காரணம் ஆகியன பற்றி எடுத்துரைக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



இப்பாடத்தை நீங்கள் படித்தால், கீழ்வரும் பயன்களைப் பெறலாம்.

  • அறம், பொருள், இன்பம், வீடு எனும் நாற்பொருளும் வலியுறுத்திச் சொல்வதனை அறியலாம்.

  • மனிதர்களில் நன்மக்கள் - தீயமக்கள், உயர்ந்தோர் - தாழ்ந்தோர் பண்புகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  • தோலாமொழித் தேவர் கூறும் சமண சமயத்தின் கருத்துகளை அறியலாம்.

  • பழந்தமிழ் மக்களின் நம்பிக்கைகள், நன்நிமித்தம், தீநிமித்தம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு