2.4 வில்லிபாரதமும்
பிறவும்
தமிழ்
இலக்கிய வரலாற்றில் பாரதம் பற்றிய செய்திகள்
இடம் பெற்றுள்ளன. அதைப்போல இராமாயணக் கதை பற்றிய
செய்திகளும் வில்லிபாரதத்தில் கூறப்பட்டுள்ளன.
2.4.1
தமிழ் இலக்கிய வரலாறும் பாரதமும்
எட்டுத்
தொகையில் ஐந்து நூல்களுக்குக் கடவுள்
வாழ்த்துப் பாடிய பெருந்தேவனார்
பாடிய பாரதம்
கிடைக்கவில்லை. ஒன்பதாம் நூற்றாண்டில் பெருந்தேவனார்
என்பவர் பாடிய ‘பாரத வெண்பா’ வில் சில
பகுதிகளே
கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து, 13ஆம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் அருணிலை விசாகன் என்பவர்
பாரதம்
பாடியுள்ளார். 16 ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார்
பாரதத்தைப் பாடினார். அதுவே வில்லிபாரதம்
என
அழைக்கப்படுகிறது. அதன் பாயிரத்தை இவருடைய மகன்
வரந்தருவார் பாடினார் என்பர் சிலர்.
பாரதக்
கதையைத் தமிழில் கூறுவதற்குப் பலர் முயற்சி
மேற்கொண்டனர். பாரதக் கதைகள் பல தோன்றினாலும்,
வில்லிபாரதம் மட்டும் தனிப் பெருமை பெற்றுத்
திகழ்கிறது.
தமிழ்
இலக்கியத்தில் தூது எனும் இலக்கியவகை 14-ஆம்
நூற்றாண்டில் தோன்றியது. உமாபதி சிவாச்சாரியரின்
நெஞ்சு
விடுதூது என்பதே முதல்தூது
நூலாகும். அதற்குமுன்
வடமொழியில் தூது நூல் தோன்றியுள்ளது.
2.4.2
இராமாயணமும் வில்லிபாரதமும்
வில்லிபாரதத்துக்கு
முன் கம்பராமாயணம் மிகவும் புகழ்
பெற்ற நிலையில் இருந்தது. இராமாயணக் கதை
பற்றிய
குறிப்புகளை வில்லிபுத்தூரார் பல இடங்களில் எடுத்தாண்டுள்ளார்.
இராமனை
அருச்சுனனுடன் ஒப்பிடுவதும், வாயுவின்
மகனான வீமனை பிறப்பு முதல் அனுமனுடன் ஒப்பிட்டுப்
பேசுவதும் காணப்படுகிறது.
சீதையைக்
கவர்ந்து சென்ற இராவணனை வெல்வதற்கு
இராமபிரான் சேனையாகக் கூட்டிக் கொண்டு போன வானர
வீரர்கள் தென்கடலில் அணைகட்டுதற்பொருட்டுப்
பல
மலைகளைக் கொணர்ந்து கடலில் இட்டனர் என்பது கதை. இதில்
இரத்த வெள்ளத்துக்கு உவர்நீர்க் கடலும், மல்லர்க்கு மலைகளும்
உவமை. (பாடல்-200)
‘இன்று
போய் நாளை வா’ என்ற நிலையில் கர்ணனுக்கு
இராவணனை உவமை ஆக்கிப் பேசுவதும், சிசுபாலனுக்குக்
கும்பகர்ணனை உவமையாகக் கூறுவதும், இராமாயணத்தின் மீது
வில்லியார் கொண்ட பற்றை வெளிப்படுத்துகின்றன.
|