தன் மதிப்பீடு : விடைகள் - I

2) பாரதியார் - சிறுகுறிப்பு வரைக.

11.12.1882 - இல் எட்டயபுரத்தில் சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சுப்பையா என்பது. தம் பதினோராம் வயதிலிருந்து கவிதைகள் படைக்க ஆரம்பித்தார். உறங்கிக் கிடந்த தமிழ்ச் சமுதாயத்தைத் தம் பாட்டுத் திறத்தால் தட்டி எழுப்பியவர். தேசிய எழுச்சி, சாதி ஒழிப்பு, பெண்ணடிமை எனப் பாரதியின் கவிதைகளும் பரந்துபட்டவை. 1921-இல் சென்னையில் காலமானார்.



முன்