தன் மதிப்பீடு : விடைகள் - I

5) தருமனின் மனத்தைச் சகுனி எவ்வாறு மாற்றினான்?

நாட்டையும் தன்னையும் தம்பியரையும் பணயப் பொருளாக வைத்து இழந்த தருமன் மிகவும் வேதனையோடு, சூதாட்டத்தை நிறுத்திவிட நினைத்தான். அப்படிச் சொல்ல நினைத்த தருமனை நோக்கிச் சகுனி, தருமனே! உன் மனைவி பாஞ்சாலியைப் பணயமாக வைத்துச் சூதாடினால், இழந்த அத்தனையும் மீண்டும் பெற்றுவிடலாம் என்று சொல்லித் தருமனின் மனத்தை மாற்றினான்.



முன்