தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
6) | பாஞ்சாலியைப் பணயப் பொருளாக வைத்துத் தோற்றதனைப் பாரதியார் எவ்வாறு கண்டிக்கிறார்? |
பாஞ்சாலியைப் பணயமாக வைத்த செயல்பற்றிப் பாரதியார், நல்ல யாகத்தில் படைக்கப்படுகின்ற வேள்விப் பொருளை, எச்சில் தேடியலையும் நாய்க்குமுன் அது மென்றிட வைப்பது போன்று உள்ளது என்றும், நல்ல உயரமான அகலமுள்ள பொன்மாளிகையைக் கட்டி, அதில் பேயினைத் தேடிக் கண்டுபிடித்துக் குடியமர்த்துவது போல உள்ளது என்றும் கடுமையாகச் சாடுகிறார் பாரதியார். |