மன்னர்களைப் பற்றியும், மதங்களைப்
பற்றியும்
கவிதைகள் புனைந்த காலம் மாறி, மக்களை
மையமாக
வைத்துத் தனது பாட்டுத்திறத்தால் நானிலத்து
மக்கள்
மேனிலையடையப் பாடிய பாரதியைப் பற்றிச் சொல்கிறது.
இந்திய
இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில்
கதையின் திருப்புமுனையானதும் பாரதப்
போரின்
தொடக்கமானதுமான ‘பாஞ்சாலி சபதத்தை’ இந்தப்
பாடம்
குறிப்பிடுகிறது. பாஞ்சாலி சபதத்தின்
மூலம் நாட்டு
விடுதலையைப் பற்றி எடுத்துரைக்கிறது.
யாவரும்
அறிந்த கதையைக் கொண்டு, யாவரும்
அறிந்து கொள்ள வேண்டிய உள்ளுறைப் பொருளாகப் பாரத
தேவியைப் பாஞ்சாலியாக வைத்துப் படைத்துள்ளதைக்
குறிப்பிடுகிறது.
உரிமைகளை
இழந்து அடிமைப்பட்ட, தோற்கக்கூடாத
தாய் மண்ணைத் தோற்றுநிற்கும்
இந்தியர்க்கும்,
இந்தியாவிற்கும் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் -
வெள்ளையர்க்குக் கௌரவர்களையும் குறியீடாக்கி
உணர்த்துவதை எடுத்துரைக்கிறது.
|