|
4.4 பாரதிதாசனின் சமுதாயச் சீர்திருத்த உணர்வு பாரதிதாசன் சிறந்த சமுதாயச் சீர்திருத்தவாதி. தமது சீர்திருத்த உணர்வுகளைக் காப்பியத்தின் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார். சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீருவதற்குக் கல்வி எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதைச் சுட்டுகிறார். மேலும் பெண்ணின் பெருமையே நாட்டின் பெருமை என்றும் வலியுறுத்துகிறார். ‘நல்லுயிர்
உடம்பு செந்தமிழ் மூன்றும் என வீறார்ந்து முழங்கும் பாவேந்தர், தாம் வாழ்ந்த காலத்துச் சமுதாயத்தில் காணப்பட்ட சாதிப் பிளவு, சமயப் பிரிவு, பொருளாதார ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் கொடுமைகளைக் கண்டு மனம் வெகுண்டு குருதிக் கண்ணீர் வடித்தார். இதற்கெல்லாம் காரணம் பெண்கள் கல்வி கற்காமையே என்று நினைத்தார். அதன் வெளிப்பாட்டினைத்தான் ‘வீரத்தாய்’ காவியத்தில் மிகவும் அற்புதமாகப் படைத்துக் காட்டுகிறார். கல்வி கற்ற பெண்ணாக வீரத்தாய் இருப்பதாலேயே அவளை எல்லாவித அடிமைத் தனத்திலிருந்தும், சூழ்ச்சியிலிருந்தும் மீள்கிற வீரப் பெண்ணாகப் படைத்துள்ளார். ‘படியாத பெண்ணினால் தீமை’ எனத் தமது மற்றொரு நூலில், படியாத பெண்ணை ‘ஊமை’ என்று திட்டுவதைக் காணலாம். கல்லாரைக்
காணுங்கால் கல்வி நல்காக் கசடர்க்குத் என்றும் எளிமையினால் ஒரு தமிழன் கல்விஇல்லை யென்றால் என்றும் கல்வியின் அவசியத்தைத் தமது கவிதைகளில் படைத்தவர் பாவேந்தர் பாரதிதாசன். கல்வி இன்றி, உரிமை இழந்து, சிந்தனை அறியாமல், கண்டதெல்லாம் குடும்பம் என்றே பெண்கள் உலகத்தைக் காண விரும்பாத கவிஞர், வீரத்தாயை, வீரமும் உறுதியும் சர்வ கலையினையும் கற்றுக் கல்விப் பெருமையும் உடையவளாகக் காட்டுகிறார் கவிஞர். ‘கல்வி இல்லாதவனை நடைப்பிணம்’ என்று இளவரசன் சுதர்மனைக் குறிப்பிடும் போது கூறுவதைக் காண முடிகிறது. ‘கல்வியில்லாதவனை ஆவியில்லாதவன்’ என்று மந்திரி மூலமாகப் பேசும் பாவேந்தரை வீரத்தாயில் காணலாம். ‘கல்வியில்லாதவன் நாட்டிலே வாழ்ந்தாலும் காட்டில் வாழ்வதற்குச் சமம்’ என்பதை சுதர்மனைக் காளிமுத்து என்னும் தன்னுடைய ஆளிடத்தில் பழக்கவிடும்போது குறிப்பிடும் சேனாபதியின் பேச்சிலிருந்து அறியமுடிகிறது. மன்னன் மகனுக்குக் கல்வியோ நல்லறிவோ ஒன்றும் வராமல் செய்யுமாறு நினைத்த சேனாபதி காங்கேயனின் சூழ்ச்சித் திறமைகளையெல்லாம் தவிடுபொடியாக்குபவளாக ‘வீரத்தாயை’க் கல்வி, கேள்விகளில் சிறந்தவளாகப் படைத்திருக்கும் பாவேந்தர் பாரதிதாசனின் உயர்ந்த எண்ணத்தை அறிய முடிகிறதல்லவா! வீரத்தாயைப் பார்த்து ‘அறிவு பெற்றபடியாலே எல்லாம் பெற்றீர்’ என்று மந்திரியைப் பேச வைத்துள்ளமையும் காண்கிறோமல்லவா? ‘தக்க நல்லறிஞரின்றித் தரணியும் நடவாதன்றோ!’ என்று கல்வி கற்ற சான்றோராக வீரத்தாயைப் போற்றுவதையும் காணமுடிகிறது. ‘அரிவையர் கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம்’ என்று நினைக்கும் தவறான சமூகச் சிந்தனைக்குச் சவுக்கடி கொடுக்க நினைத்த பாவேந்தர், ‘அன்னையும்
ஆசானும் ஆருயிரைக் காப்பானும் பெண்ணினத்தை அமைத்து, ‘எல்லார்க்கும் எல்லா உரிமைகளும்; எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக!’ என்று பொதுவுடைமைக் கோட்பாட்டை முழக்கமிடும் புதல்வனைப் பெற்ற வீரத்தாயினைக் காப்பியத்தின் இறுதியிலும் படைத்திருப்பது, பெண்ணின் பெருமையைப் பாடிய கவிஞர் பாரதிதாசன் என்பதைப் பறைசாற்றுகிறது. தமிழ்ச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமே. பெண் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டிருந்ததை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன். ‘ஆடை
அணிகலன், ஆசைக்கு வாச மலர் என்கிற பெண்களின் இழிநிலைக்கருத்தினை மாற்றியமைத்திடவே, ‘வீரத்தாய் நாடகத்தில் வீரமும் உறுதியும் சர்வகலையினையும் பயின்றவளாக வீரத்தாயைப் படைத்துள்ளார். இதன் மூலம் பாரதிதாசனின் பெண்மை நலச் சிந்தனைகள் வெளிப்படுகின்றன. மேலும் அரிவையர்
கூட்டமெல்லாம் அறிவிலாக் கூட்டம் என்பாய் எனும் கவிதை வரிகளில், பெண்கள் அறிவிலாக் கூட்டம் இல்லை என்பதனை ‘விஜயராணி’ மூலம் முறியடித்துக் காட்டுகிறார் பாரதிதாசன். “
. . . . . . . . . . ஆடவரைப் என்று, தன் மகன் சுதர்மனைக் கொல்ல வந்த சேனாபதியைத் தனது வாளால் தடுத்துக் காப்பாற்றுபவளாகக் காணப்படும் ‘வீரத்தாய்’ விஜயராணி’ மூலம் ஆண்மை உள்ளதாகக் கூறி இறுமாக்கும் ஆடவரைப் பெற்றெடுத்த தாய்க்குலமாயிற்றே அது; வீரமற்றதெனில் பிறந்த ஆண் குலமென்றோ பீடழியும்’ எனக் குறிப்பிடுகிறார். “ஆவி
சுமந்து பெற்ற அன்பன் உயிர் காப்பதற்குக் என்றும், ‘ஆர் எதிர்ப்பார் அன்னையார் அன்பு வெறி தன்னை!’ எனவும் பிறநாட்டு மன்னர்கள் வாயிலாகப் பெண்ணின் பெருமையைப் பேசும்படி செய்துள்ளார் பாரதிதாசன். “அன்னையும்
ஆசானும் ஆருயிரைக் காப்பானும் என்று அன்னையின் தத்துவத்தை உலகுக்குக் காட்ட வந்த பெண்படைப்பாகவே வீரத்தாயைப் படைத்துள்ளார் கவிஞர் பாரதிதாசன். தமிழர்களுக்கு என்று இருந்த வீரமரபினையும் பெண் கல்வியின் பெருமையினையும் ஒன்றாகச் சேர்த்து ‘வீரத்தாய்’ காவியம் நிறைவுறுகிறது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்ந்த காலம் நாடு வளமிழந்து, வறுமையில் உழன்று, உரிமை கெட்டு, அடிமையில் கிடந்து, ஏற்றத்தாழ்வான ஒரு சமுதாயமாக இருந்து கொண்டிருந்தது. உலகம் முழுவதிலும் நாடுகள் பொருளாதார அடிப்படையில் புரட்சியைத் தோற்றுவித்துப் புதிய சமுதாயத்தை அமைத்துக் கொண்டிருந்தன. அதன் வழியிலே - பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைப்பதில் பாரதிதாசனும் பேரார்வம் காட்டினார். தொழிலாளர்களைப் போர் வீரர்களாக ஆக்கினார். இந்த உலகம் உழைப்பாளர்களுடையது, மேல் கீழ் என்று பேசும் அறியாமையைப் பொதுவுடைமையினால் தானே அகற்ற முடியும் என்று நம்பினார். இந்த மாற்றங்களையே தனது படைப்புகளில் வலியுறுத்தியுள்ளார். மக்களுக்குப் பங்கில்லாத மன்னராட்சியால் கொடுமைகள் ஏற்படலாம். அவர்களின் கூக்குரலுக்குப் பதில் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் ‘குடியரசு’ ஆட்சியைப் பிரகடனப்படுத்துகிறார் பாரதிதாசன். இதனைப் புரட்சிக்கவி, வீரத்தாய், கடல்மேல் குமிழி, குறிஞ்சித்திட்டு ஆகிய தனது படைப்புகளில் நிறைவேற்றிக் காட்டுகிறார் கவிஞர். குறிப்பாக, வீரத்தாய் காவியத்தில், “எல்லார்க்கும்
தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம் என்று மணிபுரியை ‘ஓதும் குடியரசுக்குட்படுத்தி ’அரசியல் சட்டம் இயற்றிட வழிவகுக்கிறார் பாரதிதாசன். முதலாளித்துவ மோசடிக் கொள்கையால் கிடைக்கும் கூலியைக் கெஞ்சிப் பெற்றுத் ‘தலைவிதி’ என்று நொந்து கொண்டு தொலையாத துயரினைக் கண்ட பாரதிதாசன், தோழா! ஓடப்பனே! நீ ஒடுங்கி நில்லாதே, உதைப்பயனாகி நீ;ஓர் நொடிக்குள் ஒப்பப்பர் ஆகிடு! என்று உலக சமத்துவத்தின் குரலை உரத்து எழுப்பியவர் பாவேந்தர் பாரதிதாசன். ‘உழைப்போர்
உதிர்ந்த வியர்வையின் என்று தனது காவியங்களில் உழைப்போர் மேனிலையடையவும், மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி முறை நிலவிடவும், பொதுவுடைமைச் சமுதாயம் பூத்துப் பொலியவுமான பாடல்களைப் படைத்துள்ளார் என்பது புலனாகின்றது. |