புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின்
வீரத்தாய்
எனும்
காவியம் ஒரு பெண்ணின் பெருமையைப் பற்றி
எடுத்துச்
சொல்கிறது.
படைபலம்,
பணபலம் ஒன்றும் இல்லாமலேயே தன்தோள்
வலிமை ஒன்றினாலேயே சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி
காணும் பெண் ‘விஜயராணி’யைப் பற்றிப் பேசுகிறது.
நாட்டையும் மக்களையும் காப்பாற்ற
வேண்டிய
பொறுப்புள்ள அரசன், மதுவிற்கு அடிமையாகிக் கிடப்பதையும்,
அதனால் நாட்டை இழக்கும் சூழ்நிலையைப்
பற்றியும்
எடுத்துரைக்கிறது.
சூழ்ச்சி
வலையால் நாட்டைக் கைப்பற்ற நினைக்கும்
படைத்தலைவனைத் தன் அறிவு
முதிர்ச்சியாலும்
மனவுறுதியாலும் வீரமகள் விஜயராணி வெற்றி பெறுவதைச்
சொல்கிறது.
கிறுக்கனாக
வளர இருந்த மகனைக் கீர்த்திமிக்க
கலைகளில் தேறவைத்துக் கிழவராக மாறுவேடம்
பூண்டுக்
காலம் பார்த்துக் கடமையை முடிக்கும் வீரத்தாயினைப் பற்றிக்
குறிப்பிடுகிறது.
அரசியலில்
ஓர் ஆண் செய்த தவற்றினை ஒரு பெண்
அகற்றிக் காட்டுவதையும் காணமுடிகிறது.
பெண்
என்றால் இப்படியல்லவா இருத்தல் வேண்டும்
எனப் போற்றும்படி கல்வி, கேள்வி, வீரத்தில் சிறந்து விளங்கி,
சூழ்ச்சியாளர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாத்தும், மகனுக்கு
அந்நாட்டுரிமையைப் பெற்றுத் தந்தும் கடமையை
நிறைவு
செய்யும் பெண்மணியாக விஜயராணியைப்
படைத்துப்
பெண்ணின் பெருமைகளைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்கிறது.
|