6.4 இல்வாழ்க்கை நெறி இல்வாழ்க்கைக்குரிய நெறிகளுள் கற்பின் சிறப்பினையும், காதலின் உயர்வினையும் எடுத்துரைக்கிறார் கண்ணதாசன். மனித வாழ்வில் தோன்றும் உணர்வுகளில் காதல் உணர்வு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. அழகினால் கவர்ச்சியினால் தொடங்கும் காதலானது உள்ளத்தால் வலுவடைகிறது. காதல் உள்ளத்தைப் பொறுத்து அமைகிறது. காதல் இல்லாமல் இவ்வுலகத்தில் இன்பம் நிலவாது. ஆண்-பெண் படைப்பின் தீர்வே காதலாகிறது என்பதைத் தமது கவிதை வரிகளில் நிரூபித்துக் காட்டியவர் கவியரசர் கண்ணதாசன். ‘காதல் செயும் மனைவியே சக்தி கண்டீர்’ என்றும், ‘காதல் போயின் சாதல்’ என்றும் பாரதியார் காதலின் உயர்வை வலியுறுத்திப் பாடினார். ‘காதல் அடைதல்
உயிரியற்கை’ எனப் பாவேந்தர்
பாரதிதாசனாரும் பாடினார். இவர்களைப் பின்பற்றியே ஆலங்குடிசோமுவும் "காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால்
பெரும்பாடு" எனத் திரைப்படப் பாடலில் வெளிப்படுத்தினார். தாம் படைத்த மாங்கனி குறுங்காவியம் முழுவதிலும் காதலின் வெளிப்பாடுகளைப் பல நிலைகளில் உணர்த்தியுள்ளார், கண்ணதாசன்.
என்று, மாங்கனியின் கண் சுழற்சியால் அகப்பட்ட அடலேறுவின் காதல் நிலையினைப் பேசுகிறார் கவிஞர். காதல் வளர்ந்து, தனிமையில் முதன்முதலில் சந்திக்க முயல்கின்றனர்.
என்று காதலில் அகப்பட்டவர்களின் சந்திப்புப் பற்றிப் பேசுகிறார் கவிஞர் கண்ணதாசன். மேலும், காதல் வெள்ளத்தில் சிக்கிச் சிதறுண்டு தத்தளித்த அடலேறுவின் மனத்தை,
என்று காதல் வயப்பட்ட மனத்தை நம்
கண்முன் நிறுத்துகிறார்
கவிஞர். காதலர்கள் இருவரும் பேச ஆரம்பித்துவிட்டால், நேரம் ஆனதைப் பற்றிக் கவலையே படமாட்டார்கள். அதே நேரத்தில் பிரிய வேண்டிய கட்டாயமான பகல் நேரம் அரும்புகிறது. பிரிய மனமில்லாதவர்களாய் இருக்கின்றனர்.
என்று மாங்கனி - அடலேறு பிரிவின் துன்பத்தைப் பற்றிப் பேசுகிறது காவியம். மாங்கனியை விட்டு இறுதியாகப் பிரியப் போகும் அடலேறுவின் நிலையைப் பற்றிப் பேச நினைத்த கவிஞர்,
என்று, ‘இனி இதுபோல் சுகம் பெறுதல் முடியாது’ என்பதை இக்கவிதை வரிகளில் நமக்கு முன்னதாகவே உணர்த்துகிறார். இவ்வாறு, கவிஞர் கண்ணதாசன் மாங்கனி காவியம் முழுவதிலும் காதல் உணர்வை மிகவும் சிறப்பாகக் கவிதைப் படுத்தியிருக்கிறார். மனித வாழ்வில் தோன்றும் உணர்வுகளில் காதல் உணர்வும் குறிப்பிடத்தக்கது. இரு மனங்களுக்கிடையே வேர்விட்டு, கிளைவிட்டு, பூத்துக்குலுங்கிப் பரிபூரண இல்லற வாழ்வைத் தேடி அழைத்துச் செல்லும் அறப்பயணம். அந்த மாண்பமைந்த இல்லற வாழ்விற்குக் ‘கற்பே’ இருவரும் போற்றிப் பாதுகாக்கும் அணிகலனாகும். இந்த அருங்குணத்தோடு ஆணும், பெண்ணும் இல்லற வாழ்வில் இனிதே புகுந்தால் இன்பம் நல்கும்.
என்று பெண்ணிற்கும்,
என ஆடவர்க்கும் இல்லற வாழ்வின் மேன்மையைப் போற்றித் தமது பாடல்களில் போதித்தவர் கவிஞர் கண்ணதாசன். மாங்கனி காவியத்திலும் ‘கற்பு’ பற்றிய சிந்தனைகளைப் பல இடங்களில் பரவ விதைத்திருக்கிறார்.
என்று, தனக்குப் பிடிக்காத
ஒருவனை மணக்க வற்புறுத்திய
தாயின் வற்புறுத்தலை எதிர்த்துப் பேசுகிறாள் மாங்கனி. ‘தாசிகுலம்’ என்பது தொடர்ந்து அனுபவித்துவரும் கொடுமையாக இல்லாமல், மாற்றிக் காட்டுவோம் என்று போராடத் துடிக்கும் ஒரு பெண்ணின் மனவேதனையில், கற்பொழுக்கத்துடன் மாங்கனியைப் படைக்க நினைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். மாங்கனியின் மீது காதல் கொண்ட அடலேறு நள்ளிரவில் வீடு தேடி வருகிறான். அந்த நேரத்தில் அவனை எதிர்பார்க்காத மாங்கனி,
என்று பேசுவதன்மூலம், கற்பின் சிந்தனையை மாங்கனியின் கோபத்திலும் அதனைப் பற்றிச் சிந்திக்கச் செய்கிறார் கவிஞர். தாசிமனை என்று நினைத்து, எந்த நேரத்திலும் சென்று பேசலாம் என்று வருவது வீரர்களுக்கு அழகா? என்று அடலேறுவைப் பார்த்துக் கோபமாகக் கேட்கிறாள் மாங்கனி.
என்று, தான் பெண் கேட்கவே வந்தேன் என்று சொன்ன அடலேறுவைப் பார்த்துப் பேசுபவளாகவும் மாங்கனி உருவாக்கப்பட்டிருக்கிறாள். அதே நேரத்தில், அமைச்சர் மகன் படம் எடுக்கும் நாகம் போல் வந்திருந்து தன்னைக் கெடுத்துவிட்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்? நீதி கிடைத்திருக்கும். ஆனால், அழிந்துவிடும் கற்பினை யார் தருவார்? என்ற சிந்தனை வரிகளில் தமிழ்நாட்டு வீரர்கள் கற்பின் மேன்மையை உணர்ந்தவர்கள் என்பதையும், பெண்மையைப் போற்றுபவர்கள் என்பதையும் கவிஞரின் கவிதைகள் மூலம் நம்மால் உணர முடிகிறது. மோகூர் நாட்டின் மீது போர் தொடுத்துச் சென்ற அடலேறுவும் மாங்கனியும், அந்நகரின் எல்லையில் தனித்தனியே கூடாரம் அமைத்துத் தங்குகின்றனர். நள்ளிரவில் மாங்கனியும் அடலேறுவும் கொள்ளைப் பெருமயக்கத்தில் குடமதுவைக் கிண்ணத்தில் கொட்டிக் குடிப்பதுபோல, பிரிய மனமில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர். பொழுது விடிகிறது. இதனைப் பற்றிச் சொல்கின்ற கவிதை வரிகளில்,
என்று காதலிருவரும் கற்புடன் இருந்தனர் என்பதைக் கவிஞர் அழகாக எடுத்தியம்புவதைக் காணலாம். மாங்கனியும் அடலேறும் மகிழ்ந்து பிரிகின்றனர். அந்தப் பிரிவை,
என்று மாங்கனியின் கற்பின் சிறப்புப் பேசப்படுகிறது.
சேரர் படை மோகூரை வளைத்து விடுகிற சூழலில், கட்டுப்பாடற்ற சில சேர வீரர்கள் கண்டவரைக் கைதொட்டு இழுத்து, அக்கிரமச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்பொழுது, பாண்டிய நாட்டுப் பெண்கள் சிலர் அந்த வீரர்கள் சிலரை வெட்டுகின்றனர். இதனைப் பற்றிச் சொல்ல நினைத்து, கவியரசர்,
என்று பாண்டிய நாட்டுப் பெண்களின் கற்பின் சிறப்பினைக் குறிப்பிடுகிறார். சேரர் படை பாண்டியனின் மோகூர் எல்லையில் தங்குகிறது. அந்தப் படைகளின் எண்ணிக்கையைப் பற்றி உளவறிய வருகின்றான் பழையனின் படைத்தலைவன் மலைமேனி என்பவன். அப்பொழுது, ஆங்கிருந்த மாங்கனி மற்றும் பிற மகளிரைப் பார்த்தவுடன் அட்டூழியங்களைச் செய்கிறான். பல பெண்கள் மயங்கி வீழ்கின்றனர். மாங்கனியைத் தொட்டு இழுக்க வந்த மலைமேனியின் தலையில் ஒரு பலகையால் அடித்து அவனைச் செயல் இழக்கச் செய்கிறாள்.
என்று மாங்கனியின் கற்புத்திறம் கவிஞரால் பேசப்படுகிறது.
மலைமேனியை வீழ்த்திவிட்டுப் போராடிப் பிறகு தப்பித்துச் செல்கிறாள் மாங்கனி. போராடி ஓடும்போது பள்ளமொன்றில் விழுந்து விடுகின்றாள். நெற்றி பிளந்து போகுமளவிற்குக் காயமுறுகிறாள். ஆனாலும் கற்பை இழக்காதவளாகப் பெருமிதம் கொள்கிறாள். இதனை,
என்று கவிஞர் தமிழ்ப் பெண்களின் கற்பின் மேன்மையை உயர்வாகச் சுட்டுகிறார். மாங்கனியையும் மற்றும் நான்கு பெண்களையும் மலைமேனி ஆட்கள் சிறையிலிட்டுள்ளனர். நினைவு திரும்பிய மாங்கனி, மற்ற நால்வரையும் பார்க்கிறாள்.
என்று பேச்சிழந்த நிலையிலும் தன்னைச் சார்ந்தவர்களைப் பார்த்து ஆறுதல்படும் மாங்கனியாகப் படைத்திருப்பதை அறியமுடிகிறது. மலைமேனி எனும் மிருகத்திடமிருந்து மீட்டுத் தளிவேலன் என்னும் சேரநாட்டு வீரனிடம் அகப்படுகிறாள் மாங்கனி. தளிவேலனும் மாங்கனியை வைத்துப் பொன்னைப் பெற்றுவிட விரும்பி, ‘சூரபதன்’ என்பவனிடம் விற்று விடுகிறான். கொலைகாரச் சூரபதன், ‘என்ன கொடுமை செய்வானோ?’ என்று மாங்கனியும் ஏங்கி இருக்கிறாள். இதனை வெளிப்படுத்த விரும்பிய கவியரசு கண்ணதாசன்,
என்று, மாங்கனியின் பாத்திரப் படைப்பைப் பேச நினைக்கும் போதெல்லாம், கற்பின் திறத்தைப் பற்றிப் பேசுவதைக் காணலாம். இவ்வாறு மாங்கனியில் மகளிரின் கற்பு பற்றிய சிந்தனைகளைக் கவியரசு கண்ணதாசன் உரக்க வெளிப்படுத்திச் செல்வதைக் காணமுடிகிறது. |