தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
3) |
தமிழ்ப் பெண்களின் கற்பின் சிறப்பினை மாங்கனி மூலமாக எவ்வாறு கவிஞர் போற்றியுள்ளார்? |
நள்ளிரவு நேரத்தில் மாங்கனியைத் தேடி வந்த அடலேறுவைப் பார்த்துக் கோபமுடன், தீங்கு
நினைவுற்றீரோ அமைச்சர் பிள்ளை, என்று, மாங்கனியின் மூலம் வெளிப்படுத்துகிறார். அதேபோல, மாங்கனியும் அடலேறுவும் இரவு முழுவதுமாகக் கொஞ்சிப் பேசி மகிழ்கின்றனர். இதனை, விடியும் வரைக்கும் விலகவில்லை; தங்களிரு மெய்யும் துயிலவில்லை! ஆனாலும் அவ்விரவு களங்கப்படவுமில்லை. என்று கற்பின் உறுதிப் பாட்டினைக் கவிஞர் வெளிப்படுத்துவதை உணர முடிகின்றது. |