தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
5) |
மாங்கனியில் பயிலும் உவமைகளுள் சிலவற்றை எடுத்துக் காட்டுக. |
மாங்கனி காவியத்தில் உவமைகளுக்குப் பஞ்சமில்லை. ஆண், பெண் அழகு பல இடங்களில் உவமைகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன. பெண்களின் விரலுக்குச் செங்காந்தளும், அவளது வடிவ அழகிற்குப் பொன்கட்டிச் சிலையும், சிரிப்புக்கு முல்லைப் பூவும் உவமைப்படுத்தப்பட்டுள்ளன. ஆடவரின் அழகினைப் பற்றி, ‘நடையிலே ஆடவர் சிம்மம் போலும்’ என்பது போன்ற உவமைகளும் கையாளப்பட்டுள்ளன. |